தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 9, 2020, 11:27 PM IST

ETV Bharat / briefs

கரோனா - இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு

தேனி:  கரோனா நோயால் உயிரிழந்த நபரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பேராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கரோனா - இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு
கரோனா - இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு

தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த கொள்ளை நோயால் இதுவரை ஆயிரத்து 387பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 15பேர் உயிரிழந்துள்ளனர்.

தேனி கம்போஸ்ட் ஓடைத் தெருவைச் சேர்ந்த 47 வயது மதிக்கதக்க நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த நான்காம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நபர் இன்று(ஜூலை.9) உயிரிழந்தார்.

இதனையடுத்து இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்வதற்காக தேனி நகரில் உள்ள நகராட்சி மின் தகன மயானத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட இருந்தது. இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கரோனா உறுதி செய்யப்பட்ட நபரின் சடலத்தை தங்கள் பகுதிகளில் உள்ள மின் தகன மயானத்தில் எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கரோனா நோயால் பாதிப்படைந்தவர் இறந்தபின் நோய்த் தொற்று ஏற்படாது என விளக்கம் அளிக்கப்பட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து சடலம் மின் தகன மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

ABOUT THE AUTHOR

...view details