தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்டச் செயலாளர் செல்வம், விடுதலை தமிழ் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆன்லைன் வகுப்புகளை தடைசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்! - விடுதலை தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: ஆன்லைன் வகுப்புகளை தடை செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கும்பகோணத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆன்லைன் வகுப்புகளை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
அப்போது, பள்ளிகளில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் மனநலம், நற்குணங்கள் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், பல கிராமப் புற மாணவர்களிடம் செல்போன், மடிக்கணினி உள்ளிட்ட இணையதள வசதியே இல்லை.
எனவே, தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளை தடை செய்யாவிட்டால் மக்களை திரட்டி போராட போவதாகவும் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் எச்சரித்தார்.