தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினரும் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி அன்பழகனுக்குச் சென்ற வாரம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொற்று பாதிக்கப்பட்ட அமைச்சர் அன்பழகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அமைச்சரின் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பெலமாரனஅள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட ஜே.ஜே நகர் ஊர் பொதுமக்கள் சார்பாக, அமைச்சர் பூரண குணமடைந்து மக்கள் பணியை தொடர நாகம்மாள் கோயிலுக்கு பெண்கள் 101 பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க:நல வாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு நிவாரணம் இல்லை- தமிழ்நாடு அரசு