தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சென்னையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனாவால் அதிகம் பாதிப்பு - Chennai Corona News

சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 125 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 18.70 விழுக்காட்டினர் 30-39 வயது உடையவர்கள். சில நாள்களுக்கு முன் 50 முதல் 59 வயது உடையவர்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

corona
corona

By

Published : Sep 27, 2020, 3:10 PM IST

சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையார் போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்தப் பரவலை குறைப்பதற்கு அப்பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் மற்றும் மக்களிடத்தில் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அண்ணா நகர், கோடம்பாக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது. இரண்டு மண்டலங்களுக்கு அடுத்து ராயபுரம், தேனாம்பேட்டையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 125 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 18.70 விழுக்காட்டினர் 30-39 வயது உடையவர்கள். சில நாள்களுக்கு முன் 50 முதல் 59 வயது உடையவர்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தனர். அது தற்போது இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டது, தற்போது 50 முதல் 59 வயது உடையவர்கள் 18.50 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில், ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 665 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 10 ஆயிரத்து 311 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3 ஆயிரத்து 149 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மண்டல வாரியாக பாதிக்கப்பட்டவரின் பட்டியல்,

கோடம்பாக்கம் - 18241 பேர்

அண்ணா நகர் - 18145 பேர்

ராயபுரம் - 15485 பேர்

தேனாம்பேட்டை - 15478 பேர்

தண்டையார்பேட்டை - 13250 பேர்

திரு.வி.க. நகர் - 12435 பேர்

அடையாறு - 12592 பேர்

வளசரவாக்கம் - 10531 பேர்

அம்பத்தூர் - 11444 பேர்

திருவொற்றியூர் - 5011 பேர்

மாதவரம் - 5783 பேர்

ஆலந்தூர் - 6469 பேர்

சோழிங்கநல்லூர் - 4593 பேர்

பெருங்குடி - 5665 பேர்

மணலி - 2510 பேர்

ABOUT THE AUTHOR

...view details