காற்றில் பறந்த தகுந்த இடைவெளி: குஷியாக மதுகடைக்கு சென்ற மது பிரியர்கள்! - கூட்டமாக மதுகடைக்கு சென்ற மதுபிரியர்கள்
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 40 நாள்களாக இந்தியாவில் மது விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் திண்டாடி வந்தனர். தற்போது ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டும் 144 தடை உத்தரவில் சற்று தளர்வு அளித்து, மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து நேற்று காலை ஆந்திர மாநில எல்லையோர கிராமமான திருவள்ளூர் அருகே உள்ள கனகம்மாசத்திரம் பகுதிக்கு திருவள்ளூர், திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மதுக்கடைகளில் மது வாங்குவதற்கு தகுந்த இடைவெளியை மறந்து கூட்டம், கூட்டமாக சென்றுள்ளனர். இதையடுத்து காவல் துறையினர் மது பிரியர்களை வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மதுகடைகளில் செம குஷியில் மதுபிரியர்கள்