சூரியன், சந்திரன் , பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் ஏற்படக் காரணமாகும். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் சந்திரன் வருவதால் பூமியிலிருந்து சூரியனைப் பார்க்க முடியாது.
கரோனா பாதிப்பால் சூரிய கிரகணத்தைக் காண மக்களுக்கு அனுமதி இல்லை! - வான் இயற்பியல் விஞ்ஞானி குமரவேல்
திண்டுக்கல்: கரோனா தொற்று காரணமாக இன்று நிகழக்கூடிய சூரிய கிரகணத்தைக் காண மக்களுக்கு அனுமதி இல்லை என கொடைக்கானல் வானியற்பியல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

People are not allowed to watch the solar eclipse because of corona damage!
இந்த நிகழ்வை சாதாரண கண்களில் காண்பது கடினம். எனவே, இந்த வளையத்தை நேரடியாக பார்க்கக் கூடாது. இதுதவிர சன் ஃபில்ட்டருடன் கூடிய கண்ணாடிகளைப் பயன்படுத்தியே இந்தக் கிரகணத்தைக் காண முடியும்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அப்சர்வேட்டரி பகுதியில் அமைத்துள்ள வானியற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில் இந்நிகழ்வை மக்கள் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்படும். ஆனால், தற்போது கரோனா தொற்று காரணமாக மக்களுக்கு அனுமதி இல்லை என அந்நிலையம் தெரிவித்துள்ளது.