கரோனா பரவலால் தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கல்லூரிகள் செயல்படாமல் உள்ளன. இதனால் இக்கல்லூரிகளில் பணியாற்றிய கௌரவ விரிவுரையாளர்கள் பலரும் வருவாய் இல்லாமல் தவித்துவருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றிவருகின்றனர். இவர்களில் சென்னையில் மட்டுமே 300 பேர் பணியாற்றுகின்றனர்.
'குறைந்தபட்ச சம்பளமாவது கொடுங்கள்' - கௌரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை - குறைந்த பட்ச சம்பளமாவது கொடுங்கள்
சென்னை: வருமானம் இல்லாமல் தவிக்கும் தங்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும் என அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஊரடங்கால் கல்லூரிகள் செயல்படாததால் இவர்களுக்கு மாத வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கவலை தெரிவிக்கின்றனர். விரைவுரையாளர்களாகப் பணியாற்றும் தங்களுக்கு வேறு வேலைகளுக்குச் செல்வதற்கு வாய்ப்பில்லாமல் தவித்துவருவதாகவும் கூறுகின்றனர்.
இவர்களின் குடும்ப நிலையைக் கருத்தில்கொண்டு தற்போதைய சூழலில் முழு சம்பளமாக இல்லாவிட்டாலும் பாதி அளவிற்காவது சம்பளம் வழங்க வேண்டும் என உயர்கல்வித் துறைக்கு கோரிக்கை வைக்கின்றனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் சங்கத்தின் மாநில தலைவர் சென்ன கிருஷ்ணன், "வேலை இல்லாமலும், சம்பளம் இல்லாமலும் சிரமப்படும் கௌரவ விரிவுரையாளர்களின் நலன் கருதி அரசு குறைந்த பட்ச சம்பளத்தை விடுவித்தால் ஆறுதலாக இருக்கும்" என்கிறார்.