நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் 7 வார்டுகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இவர்கள் சிகிச்சைக்காக ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள கன்டோன்மென்ட் மருத்துவமனைக்குச் சென்றுவரும் நிலையில் தற்போது கரோனா தொற்று காரணமாக இம்மருத்துவமனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள பொதுமக்கள் மட்டுமே சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
வெலிங்டன் கன்டோன்மென்ட் மருத்துவமனைக்கு நகரப்பகுதியில் உள்ளோர் செல்ல தடை! - Nilgiris district news
நீலகிரி: குன்னூர் வெலிங்டன் பகுதியில் உள்ள கன்டோன்மென்ட் மருத்துவமனைக்கு குன்னூர் நகரப் பகுதியில் உள்ள நோயாளிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வெலிங்டன் கண்டோன்மென்ட் மருத்துவமனைக்கு நகரப்பகுதியில் உள்ள நோயாளிகள் செல்லத் தடை
மேலும் குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட நகரப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள், நோயாளிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனக் கன்டோன்மென்ட் முதன்மை அலுவலர் தெரிவித்த அறிவிப்பு பலகை மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.