கரோனா நோய்க் கிருமித் தொற்றுக்கு பின் கையில் பணம் இல்லை, பொது முடக்கம் என மொத்தமும் காலியாகிவிட்டது. ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்த இந்திய ஆட்டோமொபைல் துறை மொத்தமாக படுத்தேவிட்டது.
ஆட்டோமொபைல் விநியோகஸ்தர்கள் அமைப்பின் (Federation of Automobile Dealers Associations) கணக்கின்படி, பயணிகள் வாகனங்கள், கடந்த மே 2019இல் மொத்தம் 2லட்சத்து 35ஆயிரத்து 933 வாகனங்கள் பதிவானதாகக் கூறியுள்ளது. ஆனால் இந்த மே 2020இல் வெறும் 30,749 வாகனங்கள் தான் பதிவாகி இருக்கிறதாம். இது 86.97 விழுக்காடு விற்பனை சரிவாகும்.
வீட்டிலிருந்து படிக்கும் மாணவர்களை குறிவைக்கும் அமேசான்
அதே போல இருசக்கர வாகனங்கள் மே 2019இல் 14லட்சத்து 19ஆயிரத்து 842 விற்பனை ஆனது. அதுவே இந்த ஆண்டு மே மாத கணக்கின்படி வெறும் ஒரு லட்சத்து 59ஆயிரத்து 39 வாகனங்கள் தான் விற்பனை ஆகி இருக்கிறதாம். இது 88.8 விழுக்காடு விற்பனை சரிவாகும். வணிக வாகனங்கள் 96.63 விழுக்காடு விற்பனை சரிந்து இருக்கிறதாம்.
இதேபோன்று மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை சரிவு 96.34 விழுக்காடாக உள்ளது. ஒட்டு மொத்தத்தில் அனைத்து வகையான வாகனங்களின் விற்பனை 88.8 விழுக்காடு சரிந்து இருக்கிறது என கணக்கு சொல்கிறது ஆட்டோமொபைல் விநியோகஸ்தர்கள் அமைப்பு.