மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றது. தற்போதைய நிலவரப்படி பாஜக 231 மக்களவைத் தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 54 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
எல்லாப் புகழும், வெற்றியும் காந்திக்கே - பார்த்திபன் ட்வீட் - தேர்தல் 2019
சென்னை: மக்களவைத் தேர்தலில் எல்லா புகழும், வெற்றியும் காந்திக்கே என நடிகர் பார்திபன் ட்வீட் செய்துள்ளார்.
பார்திபன் ட்வீட்
தற்போது பாஜக பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால், அவர்கள் ஆட்சியை தக்க வைக்கும் சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபன் ட்வீட் செய்துள்ளார். அதில், ’எல்லாப் புகழும் வெற்றியும் காந்திக்கே’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்..
இதன் மூலம், மக்களவைத் தேர்தலில் பணம் விளையாடி இருக்கிறது என பார்த்திபன் மறைமுகமாக கூறுகிறார் என்று நெட்டிசனக்ள் கூறிவருகின்றனர்.
Last Updated : May 23, 2019, 4:15 PM IST