தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'நலத்திட்ட உதவிகள் செய்ய நிதி ஆதாரம் இல்லை'- ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு - தருமபுரி மாவட்ட செய்திகள்

தருமபுரி: கிராம ஊராட்சிகளுக்கு நிதி வழங்க கோரி பென்னாகரம் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தருமபுரியில் நிதி வழங்க கோரி   ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
தருமபுரியில் நிதி வழங்க கோரி ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

By

Published : Sep 22, 2020, 4:04 AM IST

தருமபுரி மாவட்டத்தில் 251 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி மன்ற தேர்தலுக்கு பிறகு நிதி ஒதுக்கப்படவில்லை என ஊராட்சி மன்ற தலைவர்கள் தனித்தனியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (செப்.21) தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 23 ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில், " 15ஆவது நிதிக்குழு மாநிலத்திற்கான பணிகளுக்கு கிராம ஊராட்சி மன்றத்தின் மூலம் ஒப்பந்தப்புள்ளி, நிர்வாக அனுமதி வழங்க ஆவண செய்ய வேண்டும்.

14ஆவது நிதிக்குழு மாநிலத்திற்கான சேமிப்பு நிதி ஆகிவற்றை கிராம ஊராட்சி மன்றத்தின் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோர அனுமதி வழங்க வேண்டும். கரோனா பேரிடர் மேலாண்மை காலத்தில் ஊராட்சி மன்றத்தின் மூலம் தொற்று தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களுக்கு 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

பின்னர் செய்தியாளர்களிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் பேசும்போது, “ பொது மக்களுக்களுக்கான நலத்திட்ட உதவிகளை நிதி ஆதாரம் இல்லாமல் செயல்படுத்த முடியவில்லை. குடிநீர் வசதி தெருவிளக்கு போன்ற அத்தியாவசிய பணிகளை கடன் பெற்று மக்களுக்கு செய்து வருகிறோம்” என தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details