இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்ற நிலையில், இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாழ்பாணம் தொகுதியில் போட்டியிடும் விநாயகமூர்த்தி சகாதேவன் வெற்றி பெற வாழ்த்தி ராமேஸ்வரம் தீவு பகுதியில் பாம்பன் மீனவர்கள் வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற பாம்பன் மீனவர்கள் வாழ்த்து! - இலங்கை நாடாளுமன்ற தேர்தல்
ராமநாதபுரம்: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் விநாயகமூர்த்தி சகாதேவன் வெற்றி பெற வாழ்த்தி பாம்பன் மீனவர்கள் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
பாம்பன் மீனவர்கள் வாழ்த்து
அந்த சுவரொட்டியில், "இலங்கை - இந்தியா பாரம்பரிய மீனவர்கள் பிரச்னை தீர முயற்சி எடுத்து வந்த அன்பு சகோதரன் வெற்றி வேட்பாளர் விநாயகமூர்த்தி சகாதேவன் குரல் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்ய அவர் வெற்றி பெற வேண்டும் என்று அன்புடன் வாழ்த்துகிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் அருள் தலைமையில் மீனவர்கள் அவர் வெற்றி பெற பிரார்த்தனை செய்தனர்.