12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 6ஆவது லீக் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்றுவருகிறது.
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ஹஃபிஸ், கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது ஆகியோர் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதனால், பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 348 ரன்களை குவித்தது.