உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 33ஆவது லீக் போட்டி பிர்மிங்ஹாமில் நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்களை எடுத்தது.
இதைத்தொடர்ந்து, 238 ரன்கள் இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரான ஃபகர் சமான் 9 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து, இமாம்-உல்-ஹக் 19 ரன்களில் பெவிலியனுக்குத் திரும்ப, பாகிஸ்தான் அணி 10.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 44 ரன்களை எடுத்திருந்தது.
இதைத்தொடர்ந்து, பாபர் அசாம்- முகமது ஹஃபிஸ் ஜோடி சிறப்பாக ஆடியது. இந்த ஜோடி 66 ரன்களை சேர்த்த நிலையில், முகமது ஹஃபிஸ் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, 151 பந்துகளில் 138 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், பாபர் அசாம், ஹாரிஸ் சோஹைலுடன் ஜோடி சேர்ந்தார்.
பந்தை விளாச முயன்ற ஹாரிஸ் சோஹைல் இருவரும் தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியை வெற்றிபெறச் செய்வதில் தீவிரமாக இருந்தனர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம், உலகக்கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹாரிஸ் சோஹைல் 68 ரன்களில் ரன் அவுட் ஆனார். பிறகு, ஆட்டத்தின் கடைசி ஓவரில் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது பவுண்டரி விளாசி அணியை வெற்றிபெறச் செய்தார்.
சதம் விளாசிய மகிழ்ச்சியில் பாபர் அசாம் இதனால், பாகிஸ்தான் அணி இப்போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம், இந்தத் தொடரில் தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே சந்தித்து வந்த நியூசிலாந்து அணியின் வெற்றி முடிவுக்கு வந்துள்ளது.