காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியின், உறுதியான அர்ப்பணிப்பு, தன்னலமற்ற போராட்ட வாழ்வு, கொள்கையை விடாத மனம், அப்பழுக்கற்ற தலைமை குணம் ஆகியவற்றைப் பாராட்டி பாகிஸ்தானின் மிக உயர்ந்த இந்த விருதை வழங்க வேண்டுமென அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
காஷ்மீரில் நடைபெற்றுவரும் தனிநாடு கோரும் போராட்டத்தில் 30 ஆண்டுகாலமாக முன்னணி வகித்துவரும் கிலானிக்கு இந்த விருதை வழங்க ஒருமித்த கருத்துடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காஷ்மீரில் நடந்த அட்டூழியங்கள், அடக்குமுறை நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்களை அம்பலபடுத்தியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.