இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சவுதி அரேபியாவுடன் ஆழமான வேரூன்றிய தொடர் வரலாறு மற்றும் சகோதர உறவை மேலும் நெருக்கமாக கட்டியெழுப்ப பாகிஸ்தான் உறுதியாக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி தூதருடன் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பு! - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி
இஸ்லாமாபாத் : சவுதி அரேபியாவின் தூதர் நவாஃப் பின் சயீத் அகமது அல் மல்கியை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி சந்தித்து பேசியதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவுதி தூதருடன் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பு!
இந்நிலையில், பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆதரவையும், நாட்டின் வளர்ச்சிக்கான உதவிகளையும் சவுதி அரேபியா வழங்கும் என சவுதி அரேபியா தூதர் உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பின்போது இரு தரப்பினரும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்த கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.