தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சென்னைவாசிகளுக்கு மயிலாடுதுறை அரிசி

நாகை: சென்னைவாசிகளுக்கு நியாய விலைக் கடைகளில் அரிசி வழங்க மயிலாடுதுறையில் இருந்து ரயில் மூலம் நெல் மூட்டைகள் அரவை பணிக்கு அனுப்பிவைப்பட்டுள்ளன

சென்னை வாசிகளுக்கு மயிலாடுதுறை அரிசி

By

Published : Jul 7, 2020, 9:10 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுகாக்களில் விளைந்த நெல்லை 150க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது.

இந்த நெல் மூட்டைகள் உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ள தனியார் மற்றும் அரசு அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அரைவை செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்புவது வழக்கம்.

அந்தவகையில் கோயம்புத்தூரில் உள்ள அரசு அரவை ஆலைக்கு இன்று மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து 21 சரக்கு ரயில் பெட்டிகளில் 25 ஆயிரம் மூட்டைகள் கொண்ட ஆயிரம் டன் நெல் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை வாசிகளுக்கு மயிலாடுதுறை அரிசி

இதேபோன்று சீர்காழி ரயில் நிலையத்தில் ஆயிரம் டன் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு சென்னை தனியார் அரவை ஆலைக்கு அனுப்பியுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். அங்கே அனுப்பி வைக்கப்படும் நெல் மூட்டைகள் பச்சை அரிசியாக அரைக்கப்பட்டு சென்னைவாசிகளுக்கு நியாய விலைக் கடைகளில் வழங்கப்படயுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details