தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ். இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். சில தினங்களுக்கு முன் ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக விசாரணைக்கு காவல் துறையினர் பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அடித்துள்ளனர்.
சாத்தான்குளம் உயிரிழப்பு சம்பவம்- 5,000க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு - Sathankulam death incident
தென்காசி: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் குறித்து தென்காசி மாவட்டத்தில் 5,000 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது.
இதில் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து வணிகர் சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்தனர்.
அதன்படி உயிரிழந்த வியாபாரிகளுக்கு இரங்கல் தெரிவித்தும், இச்சம்பவத்தில் தொடர்புடைய காவல் அலுவலர்களை பதவி நீக்கம் செய்யக் கோரியும் இன்று( ஜூன் 26) தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, புளியங்குடி, சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 5000 க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.