தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

11ஆவது தேசிய சிலம்பாட்ட போட்டி; 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு - ஈரோடு

ஈரோடு: 11ஆவது தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் 29 மாநிலங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

11ஆவது தேசிய சிலம்பாட்ட போட்டி; 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

By

Published : May 4, 2019, 11:27 PM IST

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் சார்பில் 11ஆவது தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. சித்தோட்டை அடுத்த டெக்ஸ்வேலி வளாகத்தில் இன்று தொடங்கியுள்ள போட்டி நாளை மறுநாள் (மே 6) ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இப்போட்டியில், தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட 29 மாநிலங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியினை தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் தலைவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

11ஆவது தேசிய சிலம்பாட்ட போட்டி; 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

எடை மற்றும் வயது பிரிவின் கீழ் நடைபெற்று வரும் போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தேசிய அளவிலான சான்றிதழ் மற்றும் பதக்கங்களும் வழங்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்

கிரிபாலா

சமுகத்தில் தங்களுக்கு நடக்கும் அவலங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ள சிலம்பம் போட்டி தற்காப்புக் கலையாக இருக்கும் என இப்போட்டியில் பங்கேற்கும் வீராங்கனை கிரிபாலா தெரிவித்துள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details