நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் நீலகிரியில் பயணிப்பதால் மேலும் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சோதனைச்சாவடியில் தடுத்து திருப்பி அனுப்பப்படும் வெளியூர் வாகனங்கள் - Return vehicles at checkpoint
நீலகிரி: வெளியூர்களில் இருந்து மாவட்டத்திற்குள் அதிகப்படியான வாகனங்கள் வருவதால் பர்லியார் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

சோதனை சாவடியில் தடுத்து திருப்பி அனுப்பப்படும் வெளியூர் வாகனங்கள்
இதனால், நீலகிரியின் எல்லைப் பகுதிகளான பர்லியார், குஞ்சப்பனை ஆகிய சோதனைச்சாவடிகளில் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு, ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை என்றால் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.
இதனால், வளைவான பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல், வெளியூர்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளும் குறைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.