தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 1999 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த துரைமுருகன் என்பவர் கடந்த ஜூன் 25ஆம் தேதி இறந்துவிட்டார்.
இறந்த காவலரின் பிள்ளைகளுக்கு உதவிய சக காவலர்கள்!
திருவள்ளூர்: மீஞ்சூர் காவல் நிலைய தலைமைக் காவலர் திடீரென இறந்துவிட்ட நிலையில் அவருடைய பிள்ளைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், மற்ற காவலர்கள் இணைந்து 13 லட்சத்து 31 ஆயிரத்து 600 ரூபாய் வங்கி வைப்பு காசோலையை அவர்களிடம் வழங்கினார்கள்.
1999 ஆம் ஆண்டு இவருடன் பணியில் சேர்ந்த சக காவலர்கள் ஒன்றுச்சேர்ந்து, மேற்படி துரைமுருகனின் குழந்தைகள் நலன் கருதி, ரூ.13,31,600 நிதி சேகரிக்கப்பட்டது. தற்போது அந்த நிதியானது குழந்தைகளின் பெயரில் வைப்பு நிதியாக வழங்க முடிவெடுத்து, அதற்குரிய ஆவணங்களை திருவள்ளூர் மாவட்டகாவல்கண்காணிப்பாளர் அரவிந்தன், அவர்களின் வாயிலாக மேற்படி துரைமுருகனின் குழந்தைகளுக்கு இன்று (ஜூலை 25) திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வழங்கினார்.
அப்போது 1999 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்கள் உடனிருக்க வழங்கப்பட்டது. காசோலையைப் பெற்றுக்கொண்ட காவலர்களின் பிள்ளைகள் அனைத்து காவலர்களுக்கும், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.