நெல்லை மாவட்டத்தில் இதுவரை 410 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 269 பேர் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்.
நெல்லையில் மேலும் ஒருவருக்கு கரோனா - நெல்லை மாவட்ட செய்திகள்
நெல்லையில் கர்நாடக வங்கி ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோருக்கு தொற்று உறுதியாவதால் நெல்லையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள கர்நாடக வங்கி ஊழியர் ஒருவருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த வங்கியை சுகாதார அலுவலர்கள் மூடிவிட்டனர். மேலும் உடனடியாக வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், அந்த ஊழியரின் குடும்பத்தினர் வங்கிக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை செய்ய அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.