தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேனியை கைப்பற்றிய ஓபிஎஸ் மகன்! - தேனி

தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன், அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரை வீழ்த்தி வெற்றிவாகை சூடியுள்ளார்.

தந்தையின் கோட்டையில் வெற்றிபெற்ற மகன்

By

Published : May 24, 2019, 9:33 AM IST

இந்தியாவில் 17ஆவது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மே 23ஆம் தேதி நடைபெற்றது.

இதில், தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் 76 ஆயிரத்து 693 வாக்குள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனை வீழ்த்தி வெற்றிபெற்றார்.

அதிமுக ரவீந்திரநாத்குமார் குறித்த தகவல்கள்:

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மகன். பள்ளிப்படிப்பை தேனியில் முடித்தவர். கோவை பி.எஸ்.ஜி. கலைக்கல்லூரியில் வணிக மேலாண்மை இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார் .

அதன் பின்னர் சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் முதுநிலை வணிக நிர்வாகம் (எம்.பி.ஏ.) படிப்பையும் நிறைவு செய்தார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஜெயலலிதா இருந்த காலத்திலேயே அதிமுக கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்.

இவர், தேனி மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பு வகித்துவருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details