தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கரோனா வார்டுக்கு மக்கள் எதிர்ப்பு - Puduchery news

புதுச்சேரி: வில்லியனூர் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் கரோனா வார்டு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரோனா வார்டுக்கு மக்கள் எதிர்ப்பு
கரோனா வார்டுக்கு மக்கள் எதிர்ப்பு

By

Published : Jul 15, 2020, 2:08 AM IST

புதுச்சேரியில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதன் காரணமாக தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி வில்லியனூர் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை வார்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்இந்த நிலையில் இன்று வில்லியனூர் - பத்துக்கண்ணு செல்லும் சாலையில் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது தங்கள் பகுதி உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா வார்டு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details