தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

திருவொற்றியூர் இடைத்தேர்தல்: அனைத்துக்கட்சி கூட்டம் - முதற்கட்ட ஆய்வு பணிகள்

திருவள்ளுர்: திருவொற்றியூர் இடைத்தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

தேர்தல் குறித்து கருத்து கேட்பு கூட்டம்
தேர்தல் குறித்து கருத்து கேட்பு கூட்டம்

By

Published : Jul 17, 2020, 9:16 PM IST

திருவள்ளுர் மாவட்டத்திற்குட்பட்ட திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்கு இயந்திரங்களை ஆய்வு செய்யும் முதற்கட்ட பணிகளை தொடங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ள நிலையில் அதற்கான கருத்து கேட்பு அனைத்துக்கட்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திமுக அமைப்பு செயளாலரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், வழக்குரைஞர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் எஸ்.மூர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட், அதிமுக, பாஜக கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருவள்ளுர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திருவொற்றியூர் இடைத்தேர்தல் வாக்கு எந்திரங்களை ஆய்வு செய்யும் பணி என்பது தேவையற்றது என மாவட்ட ஆட்சியரிடம் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் அதனையே ஆமோதித்தனர்.

இதனால் வாக்கு இயந்திரங்கள் முதற்கட்ட ஆய்வு பணிகள் நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details