தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சின்ன வெங்காயத்தின் மவுசு கூடுமா? நம்பிக்கையோடு காத்திருக்கும் விவசாயிகள்!

தென்காசி: கரோனா சூழலில் 1000 ஏக்கருக்கும் மேலாக சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்தாண்டு கணிசமான விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

சின்னவெங்காயத்தில் இன்றைய விலை
சின்னவெமகாயம்

By

Published : Jun 14, 2020, 4:04 PM IST

தென்காசி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஒட்டியுள்ள கிராமங்களில் 1000 ஏக்கருக்கு மேலாக சின்ன வெங்காயம், வாழை, மிளகாய், தக்காளி உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருகின்றனர்.

தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் இந்தப் பகுதியில் உள்ள கிராமங்கள் மலைப் பகுதியை ஒட்டி உள்ளதால் அவ்வப்போது சாரல் மழையும், சுள்ளென்று வெயிலும் மாறி மாறி பருவநிலை மாற்றத்தால் தற்போது இப்பகுதியில் சின்னவெங்காயம் விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.

ஒரு கிலோ சின்ன வெங்காயம் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு செல்லும்போது 100 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். தற்போது பருவநிலை மாற்றத்தால் சுருள் நோய் என்ற ஒரு நோய் தாக்கத்தால் சின்ன வெங்காயத்தின் தோகை சுருண்டு வருவதால் சின்ன வெங்காயத்தின் வளர்ச்சி குறைந்து காணப்படுகிறது.

இன்னும் சில நாள்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது சின்ன வெங்காயத்தின் விலை 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில் சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் நேரத்தில் நல்ல விலை இருந்தால் மட்டுமே தாங்கள் பின்வரும் காலங்களில் விவசாயத்தை தொடர முடியும் என்றும் இந்த முறை சின்ன வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்கும் என்றும் விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

மேலும், சின்ன வெங்காயத்துக்கு தண்ணீர் அருகில் உள்ள குளம் குட்டைகளில் இருந்து ராட்சத பைப் மூலம் பல மீட்டர் தூரத்திலிருந்து தண்ணீர் எடுத்துவந்து அதனை பாதுகாத்துவருகின்றனர். மேலும், கரோனா தொற்று பரவிவரும் சூழலில் கூட விவசாயிகள் தொய்வின்றி விவசாயப் பணிகளை செய்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details