பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 70க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. தமிழ்நாடு அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் செங்குணம் ஏரி, அய்யலுர் ஏரி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடிமராமத்து பணிகள் குறித்து பெரம்பலூர் ஆட்சியர் ஆய்வு - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
பெரம்பலூர்: குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் ஏரிகள் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Ongoing civic work in Perambalur - District Collector's Survey
மேலும் வரத்து வாய்க்கால்களை சீரமைத்தல், கரையை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் ஏரியில் 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா இன்று (ஜூன் 19) ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், வட்டாட்சியர் பாரதி வளவன், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
TAGGED:
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்