தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் விளைநிலங்கள் வழியாக இயற்கை எரிவாயு கொண்டு செல்ல அங்குள்ள விளைநிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழாய்கள் இறக்கப்பட்டன.
ஓஎன்ஜிசியின் 40 குழாய்களுக்கு தீ!
தஞ்சாவூர்: அம்மாபேட்டை அருகே ஓஎன்ஜிசிக்கு சொந்தமான 40 குழாய்களும் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைக் கண்ட விவசாயிகள் அங்கு வந்த ஓஎன்ஜிசி அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் உடனடியாக அலுவலர்களை வெளியேற சொன்னதை அடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
இந்நிலையில் விளைநிலங்களில் வைக்கப்பட்டிருந்த 40 ஓஎன்ஜிசி குழாய்களுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்றனர். இதில் 40 குழாய்களும் முற்றிலும் தீயினால் சேதமடைந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.