அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கூட்டுறவுத் துறையில் களப்பணியாளராகப் பணியாற்றும் பழனிச்சாமி என்பவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியருக்கு கரோனா - மூன்று நாள்கள் மூடல் - Covid-19
அரியலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறையில் பணிபுரியும் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டது.
Corona infection
இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்தும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அரியலூர் நகராட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.