தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கார், மினி வேன் மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு...! - One killed in lorry collision

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே கார், மினி வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

One killed in lorry collision
One killed in lorry collision

By

Published : Jul 8, 2020, 8:29 PM IST

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் இருந்து வெங்கல் நோக்கி சென்ற கார், மினிவேன் மீது எதிரே வந்த சரக்கு லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று மோதி சாலை ஓரம் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த வெங்கல் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார்(26),அவரது தந்தை தீனதயாளன் (வயது46), வேற்காடு கிராமத்தைச் சேர்ந்த மினி வேன் டிரைவர் முரளி, கிளீனர் விக்னேஷ் என்ற அப்பு ஆகிய நான்கு பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பெரியபாளையம் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் படுகாயமடைந்த நாலு பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தீனதயாளன் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details