தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு கரோனா உறுதி - பங்கிற்கு சீல் வைப்பு - பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு கரோனா உறுதி

தருமபுரி: மொரப்பூா் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சுகாதாரத் துறையினர் அவரது பெட்ரோல் பங்கிற்கு சீல் வைத்துள்ளனர்.

Corona Confirm In Morappur
Corona Confirm In Morappur

By

Published : Jun 10, 2020, 7:26 PM IST

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்திவரும், நபருக்கு நேற்று கோயம்புத்தூரில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரோனா தொற்று பாதித்தவரின் பயண விவரத்தைக் கேட்டறிந்து தொற்று பரவாமல் இருப்பதற்காக சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு பெட்ரோல் பங்க் உரிமையாளர் மொரப்பூரில் உள்ள தனது பெட்ரோல் பங்கிற்கு வந்து சென்றது தெரியவந்தது.

இதனால், பெட்ரோல் பங்கிற்கு, சீல் வைத்து மூடப்பட்டு, ஊழியர்களை 14 நாள்கள் தனிமையில் இருக்க அறிவுறித்தி கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details