கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூர் பகுதியில் நேற்று முன்தினம் (ஜூலை 17) அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், பெரியார் சிலையை அவமதித்தனர். இதைக் கண்டித்து பெரியார் சிலையை அவமதிப்பு செய்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்யக் கோரி திமுக, திராவிடர் கழகம் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரியார் சிலை அவமதிப்பு: இந்து முன்னணி கட்சி பிரமுகர் கைது! - பெரியார் சிலையை அவமதித்த இந்து முன்னணி காட்சியைச் சேர்ந்த நபர் கைது
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் பெரியார் சிலையை அவமதித்தது தொடர்பான புகாரில் இந்து முன்னணி கட்சி பிரமுகர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்வதாக காவல் துறையினர் உறுதியளித்ததன் பேரில், மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி, இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள பெரியார் சிலையை அவமதிப்பு செய்ததாக இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்த மணி என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.