தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மெக்சிகோவிலிருந்து வந்த பொறியாளருக்கு கரோனா உறுதி! - ThooThukudi district News

தூத்துக்குடி: மெக்சிகோவிலிருந்து பெரியதாழை கிராமத்துக்கு திரும்பிய பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

one more Corona Positive Case reported in Thoothukudi
one more Corona Positive Case reported in Thoothukudi

By

Published : Jun 17, 2020, 1:56 PM IST

மெக்சிகோ நாட்டிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து அதன் பிறகு கார் மூலம் தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழைக்கு வந்த 32 வயது பொறியாளருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 437ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் 19 பேர் குணமடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் இன்று வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் 325 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 110 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details