தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள க.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகுமார்(33). விவசாயக் கூலி வேலை செய்துவரும் இவர், இந்து முன்னணி அமைப்பின் க.புதுப்பட்டி பேரூர் செயலாளராகப் பதவி வகித்துவந்தார்.
இந்நிலையில், இவரது உறவினரான ஏழ்ய் வயது சிறுவன் நேற்று கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள முல்லை பெரியாற்று நீரில் மூழ்கி உயிரிழந்தான். இந்த துக்க நிகழ்வை விசாரிப்பதற்காக ஸ்ரீகுமார் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு நேற்றிரவு ஊர் திரும்பியுள்ளார்.
அப்போது, கம்பம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர் திசையில் கொடைக்கானலிலிருந்து கேரளாவிற்கு காய்கறி ஏற்றி வந்த சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஸ்ரீகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த கம்பம் காவல் துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, சரக்கு வாகன ஓட்டுநரான கொடைக்கானல் பூம்பாறையை சேர்ந்த பாலமுருகனை(20) கைது செய்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுநரான கொடைக்கானல் பூம்பாறையைச் சேர்ந்த பாலமுருகனை(20) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆபாசமாக புகைப்படம் எடுத்து சிறுமியை தற்கொலைக்குத் தூண்டிய இளைஞர்கள் போக்சோவில் கைது!