தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சவுதியில் மாரடைப்பால் கார் ஓட்டுனர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: சவுதி அரேபியாவில் மாரடைப்பால் உயிரிழந்த கார் ஓட்டுனரின் உடல் இந்தியன் சோசியல் போரம் என்ற அமைப்பின் மூலம் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது.

சவுதியில் மாரடைப்பால் கார் ஓட்டுனர் உயிரிழப்பு  in Saudi Arabia
சவுதியில் மாரடைப்பால் கார் ஓட்டுனர் உயிரிழப்பு in Saudi Arabia

By

Published : Apr 22, 2021, 9:40 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் வெள்ளாலகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (27). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஏப்.8ஆம் தேதி அன்று திடீரென ஆனந்தராஜ்க்கு மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தார். இதையடுத்து ஆனந்தராஜின் உடலை தமிழ்நாடு கொண்டு வருவதற்கு வழி தெரியாமல் அவரிது குடும்பத்தினர் தவித்து வந்தனர்.

இதனையறிந்த மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள எஸ்டிபிஐ கட்சியினர், சவுதி அரேபியாவிலுள்ள தமிழர் வாழ் மக்களுக்கன அமைப்பான இந்தியன் சோசியல் போரம் என்ற அமைப்பின் மூலம் ஆனந்தராஜ் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.

சவுதியில் மாரடைப்பால் கார் ஓட்டுனர் உயிரிழப்பு

இதையடுத்து இன்று (ஏப்.22) சவுதி அரேபியாவிலிருந்து ஆனந்தராஜ் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. உடலை எஸ்டிபிஐ கட்சியின் கல்பட்டு மாவட்ட தலைவர் தமிம் அன்சாரி பெற்றுகொண்டார். பின்னர் உடல், சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து உடலை சொந்த ஊர் கொண்டு வர உதவிய எஸ்டிபிஐ கட்சியினருக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details