தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தும்பிபாடி கிராமத்தில் ரேஷன் கடை திறப்பு - Salem District News

சேலம்: ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடையை ஓமலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் திறந்துவைத்தார்.

தொட்டியநாயக்கர் சமூகத்தாரின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்
தொட்டியநாயக்கர் சமூகத்தாரின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்

By

Published : Jul 6, 2020, 10:58 PM IST

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தும்பிபாடி கிராமம் தொட்டியநாயக்கனூர் பகுதியை சுற்றிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட தொட்டிய நாயக்கர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், பொருளாதார அளவில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள்.

இவர்கள் தங்களின் பகுதியில் ரேஷன் கடை அமைத்து தர வலியுறுத்தி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்று தொட்டியநாயக்கனூரில் நியாய விலைகடை புதியதாக கட்டப்பட்டது.

அந்தக் கடையை இன்று (ஜூலை6) ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் அசோகன், ராஜேந்திரன் மற்றும் கோவிந்தராஜ், தொட்டியநாயக்கனூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மன்னர்மன்னன் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details