மதுரை பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் மேம்பாலத்தின் கீழ் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த சில நாள்களாக சாலையோரம் கேட்பாரற்று கிடந்தார். அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர் காளமேகம் என்பவரின் முயற்சியால் கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் காணப்பட்ட அந்த முதியவர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
கரோனா அறிகுறியுடன் இருந்த ஆதரவற்ற முதியவர் மீட்பு!
மதுரை: கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் சாலையோரத்தில் கிடந்த ஆதரவற்ற முதியவர் ஒருவர் மீட்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கரோனா அறிகுறியுடன் சாலையோரத்தில் இருந்த ஆதரவற்ற முதியவர் மீட்பு
இது குறித்து காளமேகம் கூறுகையில், “கடந்த சில நாள்களாக அந்த முதியவர் ஆதரவற்ற நிலையில் சாலையோரத்தில் கிடந்தார். அவரை அழைத்துச்செல்ல 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் வரவில்லை. பிறகு மதுரை ஆட்சியரை தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் தெரிவித்ததும், சமபந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக அந்த முதியவர் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்” என்றார்.