தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர்!

தருமபுரி: நகர காவல் ஆய்வாளரைக் கண்டித்து முதியவர் தனது குடும்பத்தாருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர் மீட்பு!
Old man attempt suicide with his family

By

Published : Jul 26, 2020, 9:15 AM IST

தருமபுரி மாவட்டம் பழைய ரயில்வே லைன் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (68). இவர் தனது மனைவி, இரு மகன்களுடன் அதே பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்துவருகிறார். இவர், கடந்த 2000ஆம் ஆண்டு சம்பத் என்பவரிடம் வீட்டை விலைக்கு வாங்கி குடியிருந்து வந்தார்.

இந்நிலையில், மதிகோண்பாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணாயிரம் உள்ளிட்ட சிலர், கோபால் குடியிருக்கும் வீட்டை தாங்கள் விலைக்கு வாங்கியதாகக் கூறி கோபாலிடம் தொடர்ந்து தகராறு செய்துவந்துள்ளனர்.

இதனையடுத்து கோபால் தருமபுரி நகர காவல் நிலையத்தில், கண்ணாயிரம் உள்ளிட்ட சிலர் மீது புகார் அளித்துள்ளார். புகார் அளித்தும் காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மீண்டும் தகராறில் ஈடுபட்ட அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டை இடிக்க வந்துள்ளனர்.

அதனையடுத்து மீண்டும் தருமபுரி நகர காவல் நிலையத்தில் கோபால் புகார் அளித்துள்ளார். ஆனால், நகர காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் அவரது வீட்டை அபகரிக்க முயல்பவர்களுக்கு சாதகமாக பேசியதோடு மட்டுமில்லாமல், கோபால் மற்றும் அவரது இரு மகன்களையும் அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்த பாதிக்கப்பட்ட முதியவர் கோபால், தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் சட்டத்திற்கு புறம்பாக காவல் ஆய்வாளர் துணையுடன் தனது வீட்டை அபகரிக்க முயல்பவர்களிடமிருந்து வீட்டை மீட்டு தரவேண்டும் என்றும், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கும் நகர காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார்.

ஆனால், அங்கு மாவட்ட ஆட்சியர் இல்லாததையடுத்து மனமுடைந்த முதியவர் தனது குடும்பத்தாருடன் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details