கோவை மாவட்டம், சூலூர் அருகேயுள்ள தென்றல் நகர் பகுதியில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான அட்டை குடோன் உள்ளது. இந்த குடோனில் 20 டன் அளவிலான பழைய அட்டைகள் அடிக்கி வைக்கப்பட்டிருந்தன.
சூலூர் அட்டை குடோனில் தீ விபத்து! - கோவை குடோன் தீ விபத்து
கோவை: சூலூர் பழைய அட்டை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான அட்டைப் பெட்டிகள் எரிந்து நாசமாயின.
இந்நிலையில், இன்று குடோனில் திடீரென பழைய அட்டைகளில் தீ பிடித்து எரிந்து கரும்புகையுடன் வேகமாக அப்பகுதி முழுவதும் பரவியது. இதைக் கண்டு அதிர்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக சூலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், சூலூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதனிடையே, குடோனில் வைக்கப்பட்டடிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான அட்டைப் பெட்டிகள் எரிந்து நாசமாயின. மேலும் தீ விபத்து மின் கசிவின் காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.