தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பிரபல எண்ணெய் நிறுவனத்தின் பெயரில் போலி தயாரிப்பு: நிறுவனத்திற்கு சீல் வைத்த அலுவலர்கள்! - போலி எண்ணெய் தயாரித்த நிறுவனம்

திருச்சி: சூரியகாந்தி சமையல் எண்ணெய் பாக்கெட்டில் பாமாயிலை நிரப்பி விற்பனை செய்துவந்த நிறுவனத்திற்கு அலுவலர்கள் சீல் வைத்தனர்.

counterfeit oil
counterfeit oil

By

Published : Apr 23, 2021, 1:42 PM IST

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் சமையல் எண்ணெய் பேக்கிங் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வந்தது. "சில்வர் கோல்ட் சன் பிளவர் ஆயில்" என்ற பெயரில் இந்த நிறுவனம் சூரியகாந்தி எண்ணெய்யை பேக்கிங் செய்து விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தியது.

பிரபல "கோல்டு வின்னர்" எண்ணெய் நிறுவனத்தின் பாக்கெட்டை போலவே இந்த எண்னெய் பாக்கெட்டும் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. திருச்சி மாவட்டத்திலுள்ள சிறிய, பெரிய மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்களில் இந்த எண்ணெய் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இங்கு பேக்கிங் செய்யப்படும் சூரியகாந்தி எண்ணெயில் தரம் இல்லை என்றும், கலப்படம் செய்யப்படுகிறது என்றும் குற்றச்சாட்டும் எழுந்தது. இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாகத் துறை நியமன அலுவலர் மருத்துவர் ரமேஷ்பாபு தலைமையில் அந்த குறிப்பிட்ட எண்ணெய் நிறுவனத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில், சூரியகாந்தி எண்ணெய்க்கு பதிலாக பாமாயிலை நிரப்பி விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த எண்ணெய் மாதிரிகளை அலுவலர்கள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த 5 ஆயிரத்து 410 லிட்டர் பாமாயிலையும் அலுவலர்கள் கைப்பற்றினர். மேலும், போலி எண்ணெய் தயாரித்து வந்த நிறுவனத்தை அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details