தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டர் பதிவில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனியார் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அளிக்கிறது.
வேல்முருகனை இழந்து பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியிருந்தார்.