2019ஆம் ஆண்டுக்கான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர், ஸ்பென் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்றுப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரும், செர்பிய வீரருமான நோவாக் ஜோகோவிச் பிரான்ஸ் நாட்டின் ஜெரிமி கார்டியை (jeremy Cardy) எதிர்கொண்டார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் : காலிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச்! - Madrid
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில், ஆடவர் ஒற்றையர் சுற்றுப் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டென்னிஸ்: காலிறுதிச் சுற்றில் ஜோகோவிச்
இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-1, 7-6 என்ற நேர்செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதைத்தொடர்ந்து, ஜோகோவிச் நாளை நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில், குரோஷியாவின் மரின் சிலச்-சை சந்திக்க உள்ளார்.