தமிழ்நாடு

tamil nadu

கிசான் சம்மான் திட்டத்தில் முறைகேடு இல்லை - திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

By

Published : Sep 9, 2020, 2:53 PM IST

திருப்பூர் : பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தில் முறைகேடு எதுவும் இல்லை என்றும், விரைவில் இது குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்

ஊரடங்கு தளர்த்தப்பட்டு, திருப்பூர் மாவட்டத்திற்கு பிற மாவட்டத் தொழிலாளர்கள் வருகை அதிகரித்துள்ளதை முன்னிட்டு, பேருந்து நிலையங்களில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

அப்போது பொது மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் மாஸ்க் அணியாதவர்களை எச்சரித்து மாஸ்க் வழங்கவும் செய்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “பிற மாவட்ட மக்கள் திருப்பூருக்கு பணி நிமித்தமாக வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னலாடை நிறுவனங்களுக்கு கூட்டங்கள் நடத்தி வழிகாட்டு நெறிமுறைகள் விளக்கப்பட்டுள்ளது. கோவிட் சோதனையை பொதுமக்கள் எளிதாகப் பெற கூடுதலாக ஒன்பது இடங்களில் மாதிரி சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கிசான் திட்டத்தில் தற்போது ஆய்வு மேற்கொண்ட வரையிலும் திருப்பூர் மாவட்டத்தில் முறைகேடுகள் இல்லை. ஓரிரு நாட்களில் முழு ஆய்வு முடிவுகள் வெளிவரும்” எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details