தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வணிகர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தனர். அவர்களை காவல் துறையினர் அடித்துக் கொலை செய்ததாகக் கூறி அவர்களது உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட காவலர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்தச் செய்தி கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். என்ன குற்றம் செய்திருந்தாலும், எந்த ஒரு மனிதனுக்கும் இதுபோன்ற மிருகத்தனமான விஷயம் நடக்கக்கூடாது.