தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஜிஎஸ்டி தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் கிடையாது: நிதியமைச்சகம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று 40ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்று தங்களது முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஜிஎஸ்டி கவுன்சில்
ஜிஎஸ்டி கவுன்சில்

By

Published : Jun 12, 2020, 6:45 PM IST

டெல்லி: ஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாமதமானால் அபராதம் விதிக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

40ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்று தங்களது முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஏன் 18% ஜிஎஸ்டி? பரோட்டா பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தும் புது விளக்கம்!

கூட்டத்துக்குப் பிறகு இன்று பிற்பகலில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ஜூலை மாதம் 2017 - ஜனவரி 2020 வரை ஏராளமான ஜிஎஸ்டி கணக்குகள் தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன. இதில், வருமான வரியை முழுமையாக செலுத்தியிருந்தால், ஜிஎஸ்டி வரி தாக்கலில் தாமதம் ஏற்பட்டாலும், அதற்கு அபராதம் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார்.

40ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

  • கோவிட்-19 தாக்கத்திற்கு முந்தைய ஜூலை 2017 முதல் ஜனவரி 2020 வரையிலான காலகட்டத்தில், ஏராளமான வரி தாக்கல் செய்யாமல் நிலுவையில் உள்ளது. இந்த காலகட்டத்தில் வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதத் தொகை வசூலிக்கப்படமாட்டாது.
  • வரி வரம்பிற்குள் உள்ளவர்கள், ஜூலை 2017 - ஜனவரி 2020 காலகட்டத்தில் ஜிஎஸ்டிஆர் -3 பி வருமான கணக்கை தாக்கல் செய்யாத பட்சத்தில், தாமத கட்டணமாக 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 1, 2020 - செப்டம்பர் 30, 2020வரை சமர்ப்பிக்கப்படும் அனைத்து வருமானங்களுக்கும் பொருந்தும்.
  • மொத்த வருவாய் ரூ. 5 கோடி வரையுள்ள சிறிய வரி செலுத்துவோருக்கு, அபராதத்திற்கான வட்டி விகிதம் 18 விழுக்காட்டிலிருந்து 9ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details