டிஜிபி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர் கிரைம் பிரிவில் எஸ்.பி.,யாக அருண் பாலகோபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். அதே பிரிவில், எஸ்.பி.,யாக இருந்த ஓம் பிரகாஷ் மீனா, நிர்வாகப் பிரிவு உதவி ஐஜியாகவும், சிபி சக்ரவர்த்தி சிபிசிஐடி பிரிவில் உள்ள சைபர் செல் எஸ்.பி.,யாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் விவகாரம்: 9 ஐ.பி.எஸ் அலுவலர்கள் இடமாற்றம்! - Nine IPS officers transferred
சென்னை: சாத்தான்குளம் விவகாரத்தில் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் பாலகோபாலன் உள்பட ஒன்பது ஐ.பி.எஸ் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிபிசிஐடியிலிருந்த ஜெயலெஷ்மி, வண்டலூர் அருகேயுள்ள காவலர் பயிற்சி அகாதமியின் எஸ்.பி.,யாகவும், அந்த பிரிவில் எஸ்.பி.,யாக இருந்த ஜெயசந்திரன் கமாண்டோ படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போல், சியாமளா தேவி, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு எஸ்.பி.,யாகவும், கண்ணம்மாள் சென்னை மத்திய குற்றப்பிரிவின் துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அம்பத்தூர் காவல் மாவட்டத்தின் துணை ஆணையராக தீபா சத்யனும், அந்த பொறுப்பில் இருந்த ஐ.பி.எஸ் அலுவலர் நிஷா சைபர் செல் எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.