சென்னை புழல் மத்திய சிறையில், பயங்கரவாதிகளான பிலால் மாலிக், பக்ருதீன் பன்னா, இஸ்மாயில் ஆகியோர் வெடிகுண்டு வழக்கில் கைதுச் செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள், அத்துறை டிஎஸ்பி சாகுல் அமித் தலைமையில் இன்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
புழல் மத்திய சிறையில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் விசாரணை! - புழல் மத்திய சிறையில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை!
திருவள்ளூர்: இலங்கை குண்டு வெடிப்பு விவகாரம் தொடர்பாக, சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளான பிலால் மாலிக், பக்ருதீன் பன்னா, இஸ்மாயில் ஆகியோரிடம் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
![புழல் மத்திய சிறையில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் விசாரணை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3597684-thumbnail-3x2-a.jpg)
புழல் மத்திய சிறையில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை!
புழல் மத்திய சிறையில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் விசாரணை!
நான்கு மணிநேரம் நடைபெற்ற இந்த விசாரணை தொடர்பாக அலுவலர்கள் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை.ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் இலங்கை மனித வெடிகுண்டு தாக்குதல் குறித்து சென்னை, கோவை மதுரை ஆகிய இடங்களில் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.