தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நெய்வேலி பாய்லர் விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு - Neyveli accident Death toll rises to 7

கடலூர்: நெய்வேலி என்எல்சி பாய்லர் விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

Neyveli accident Death toll rises to 7
Neyveli accident Death toll rises to 7

By

Published : Jul 3, 2020, 10:36 PM IST

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் உள்ள இரண்டாவது சுரங்கத்தில் யூனிட் ஐந்தின் பாய்லர் நேற்று முன்தினம் (ஜூலை 1) வெடித்தது. இதில், தொழிலாளர்கள் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்தவர்களை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 17 பேரில் ஒருவரை அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் 16 பேரை சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

தற்போது அப்போலோ மருத்துவமனையில் என்எல்சி நிரந்தர ஊழியர் சிவகுமார்(53) என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details