தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

CWC19: வங்கதேசம் எதிரான போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சு! - நியூசிலாந்து

லண்டன்: வங்கதேசம் அணிக்கு எதிரான 9ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

CWC19: வங்கதேசம் எதிரான போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சு!

By

Published : Jun 5, 2019, 6:38 PM IST

12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், நியூசிலாந்து - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 9ஆவது லீக் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இவ்விரு அணிகளின் வீரர்கள் வரிசையில் எந்த மாற்றமும் இல்லை. நியூசிலாந்து அணி இலங்கை அணியுடனும், வங்கதேசம் அணி தென்னாப்பிரிக்க அணியுடனும் வெற்றிபெற்றது. இதனால், இன்றையப் போட்டியில் எந்த அணி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்யும் எனும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வங்கதேசம் அணி விவரம்: தமிம் இக்பால், சவுமியா சர்கார், ஷகிப்-அல்-ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம், மொர்டோசா (கேப்டன்), முகமது மிதுன், மஹமதுல்லாஹ், மொசடக் ஹொசைன், மெகிடி ஹாசன், முகமது சைஃப்வுதீன், முஸ்தாஃபிஸுர் ரஹ்மான்

நியூசிலாந்து அணி விவரம்: கேன் வில்லியம்சன்(கேப்டன்), கப்தில், முன்றோ, டெய்லர், டாம் லதாம், ஜெம்ஸ் நீஷம், காலின் டி கிராண்ட்ஹோம், சான்ட்னர், ஹென்ரி, லோக்கி ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்

இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்து வரும் வங்கதேச அணி நான்கு ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி, 15 ரன்களை எடுத்துள்ளது. தமிம் இக்பால் 11 ரன்களுடனும், சவுமியா சர்கார் நான்கு ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details