தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறைக் காவலில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக தூத்துக்குடி கூடுதல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த இருவருக்கும் பணியிடத்தை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு காவல்துறை இயக்குநரும் சட்டம் ஒழுங்கு டிஜிபியுமான திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுகோட்டையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு அலுவலராக பிரதாபனையும், நீலகிரியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக குமாரையும் அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளார்.